தாந்தோணி கோயம்பள்ளியில் சிதிலமடைந்த அரசு பள்ளியால் மாணவ, மாணவிகள் கடும்

அவதிகரூர், ஜன. 18: தாந்தோணி ஒன்றியம் கோயம்பள்ளியில் சிதிலமடைந்த அரசு பள்ளியை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாந்தோணி ஒன்றியம் கோயம்பள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள ஓட்டு கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. ஓடுகள் விழுந்தும், சுவர்கள் ஓட்டையாகவும் உள்ளது. மாணவ, மாணவியருக்கு மதிய உணவு தயாரிக்கும் கூடமும் சீரமைப்பு பணிகள் செய்யப்படாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பள்ளிக்கட்டிடத்தை சீரமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியாவது அதிகாரிகள் தேவையான நிதியை ஒதக்கீடு செய்து பள்ளி வகுப்பறை கட்டிடத்தையும், சத்துணவுக் கூடத்தையும் சீரமைக்க ஆவன செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: