சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளையும் சமமாக நடத்திட வேண்டும் கலெக்டர் பேச்சு

கரூர், அக். 11: கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் கல்வி இயக்கமும், மாற்றுத்திறானிகள் நல அலுவலகமும் இணைந்து சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்திய சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு கூறியதாவது:

மற்றவர்களை போல மாற்றுத்திறனாளிகளையும் சமூகத்தில் சம அளவில் நடத்திட வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதனடிப்படையில், எலும்பு மருத்துவர், காது, மூக்கு? தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், மனநல மருத்துவர், பொதுமருத்துவர், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர்களை கொண்டு முகாம் நடத்தப்பட்டது. இதில், 202 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இதில், 22 மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை பெற 20 நபர்களும், மனவளர்ச்சி குன்றியோருக்கான உதவித்தொகை பெற 25 நபர்களும், 75 சதவீதத்திற்கு மேல் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாயார்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க 3 பயனாளிகள் என மொத்தம் 95 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்றார். நிகழ்ச்சியில், டிஆர்ஓ சூர்யபிரகாஷ், ஆர்டிஓ சரவணமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, தாசில்தார் ஈஸ்வரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: