வைரமுத்துவுக்கு விருது முதல்வர் வாழ்த்து

சென்னை:  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: ‘கவிப்பேரரசு’ வைரமுத்து புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவதுபோல அவருக்கு கேரளாவின் மிகப் புகழ்பெற்ற விருதான ஓ.என்.வி. விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி.குறுப்புவின் பெயரால் கேரளப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழு விருதாளரை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. தேசிய அளவிலான இந்த உயரிய விருதைப் பெறும் மலையாள மொழியல்லாத முதல் கவிஞர் என்ற பெருமையை கவிப்பேரரசு பெற்று, அன்னைத் தமிழுக்கும் சிறப்பு சேர்த்திருக்கிறார். தமிழுக்கு பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசின் இலக்கியப் பயணம் சிறந்திட வாழ்த்துகள்….

The post வைரமுத்துவுக்கு விருது முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: