வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மோசடி

 

கோவை, ஆக. 5: வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை காந்திபுரம் 6வது தெருவை சேர்ந்தவர் கற்பகம் (35). தனியார் நிறுவன ஊழியர். இவர் வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்து வந்தார். அப்போது அவருக்கு கோவை புலியகுளத்தை சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் தினேஷ் ஆகியோரின் அறிமுகம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் கற்பகத்திடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தனர். மேலும் விமான செலவு, ஆவணங்கள் உள்ளிட்டவற்றுக்கு பணம் செலவாகும் என தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய கற்பகம் அவர்களின் வங்கி கணக்கில் ரூ.3.50 லட்சம் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட பின்னரும் அவர்கள் வேலைக்கான எந்தவிதமான ஏற்பாடுகளையும் செய்து தராமல் இருந்தனர். இதனால், ஏமாற்றமடைந்த கற்பகம் அவர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தாருங்கள், இல்லையென்றால் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுங்கள் என கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்காமல் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கற்பகம் ராமநாதபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் மோசடி பிரிவில் தினேஷ்குமார், தினேஷ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: