ரவுடி கொலை வழக்கில் கோர்ட்டில் ரவுடி சரண்

அண்ணாநகர்: பாடி புதூரை சேர்ந்தவர் கண்ணதாசன் (30). இவர் முகப்பேர் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மோகன், டேனியல், கோகுல்ராஜ், மதன்குமார், யோகேஷ், விக்னேஷ், பால்ராஜ், ஜெகதீஸ்வரன், ராஜேஷ் (34) ஆகியோருக்கும், யார் பெரிய தாதா என்ற போட்டி இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வருடம் ரவுடி கண்ணதாசன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக மோகன், டேனியல், கோகுல், மதன்குமார், யோகேஷ், விக்னேஷ், பால்ராஜ் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகிய 8 பேரை ஜே.ஜே.நகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கொலை வழக்கு தொடர்பாக ரவுடி ராஜேஷை தேடி வந்தனர். போலீசார் அவரை தேடுவதை அறிந்த ராஜேஷ் நேற்று முன்தினம் மாலை அம்பத்தூர் நீதிமன்ற குற்றவியல் நீதிபதி பரம்வீர் முன்பு சரணடைந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய, போலீசார் முடிவு செய்துள்ளனர். இவர்மீது, ஆதம்பாக்கம், கொரட்டூர், அம்பத்தூர் மற்றும் ஜேஜே.நகர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி உள்பட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது….

The post ரவுடி கொலை வழக்கில் கோர்ட்டில் ரவுடி சரண் appeared first on Dinakaran.

Related Stories: