மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் எஸ்பி ஆய்வு

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் எஸ்பி பிரவேஸ்குமார் ஆய்வு நடத்தினார்.முழு ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மாவட்ட எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 சோதனைச்சாவடிகளில் போலீசார் நேற்று வாகனங்களில் வந்தவர்கள் இ-பதிவு செய்து அனுமதி பெற்று உள்ளார்களா? என தொடர்ந்து சோதனை நடத்தினர். இ-பதிவு ஆவணங்களை சரிபார்த்த பின்னரே, மாவட்டத்துக்குள் அந்த வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். இதை தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில், காரிமங்கலம் அருகே அமைந்துள்ள சோதனைச்சாவடி, தர்மபுரி-சேலம் மாவட்ட எல்லையில், தொப்பூர் பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடி ஆகியவற்றில் வாகனங்களில் வந்தவர்களிடம் இ-பதிவு சான்று ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. காரிமங்கலம் அருகே உள்ள சோதனைச்சாவடியில் நடந்த வாகன சோதனையை, மாவட்ட எஸ்பி பிரவேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 69 தற்காலிக சோதனைச்சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நேற்று நடத்தப்பட்டது. அப்போது வாகனங்களில் செல்பவர்கள் அத்தியாவசிய தேவைகள், அவசிய மருத்துவ தேவைகளுக்காக செல்கிறார்களா? என்பதை முழுமையாக விசாரித்த பின்னரே மேற்கொண்டு செல்ல போலீசார் அனுமதித்தனர். மற்றவர்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர்.தர்மபுரி நான்கு ரோட்டில் நான்கு திசையிலும் பேரிகாடு அமைத்து முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனம் செல்ல மட்டும் வழிவிடப்பட்டுள்ளது. அந்த வழியில் வரும் வாகனங்களை மட்டும் போலீசார் மடக்கி சோதனை செய்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரில் ஏற்படும் நிலை ஏற்படுகிறது.தர்மபுரி- பென்னாகரம் சாலையில் பேரிகாடு இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளதால், டூவிலர் வாகன ஓட்டிகள் செல்ல அணிவகுத்து நிற்கின்றனர். இதனால் ஆம்புலன்ஸ்கள் சரியாக செல்ல முடியாமல் திணறும் நிலை உள்ளது. எனவே தர்மபுரி நான்கு ரோட்டில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்படி வாகனை நிறுத்தி சோதனை செய்வதை போலீசார் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் எஸ்பி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: