போலீஸ் ஸ்டேஷன் பதிவேடுகள் நவீன சாப்ட்வேரில் பதிவேற்றும் பணி தொடக்கம் போலீஸ் அதிகாரிகள் தகவல் காகித பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி

வேலூர், ஜூன் 14: காகித பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீஸ் ஸ்டேஷன் பதிவேடுகள், புதிதாக நவீன சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள், வாகன தணிக்கையில் பிடிபடும் கடத்தல் பொருட்கள் மற்றும் காவல் நிலையத்தில் உள்ள துப்பாக்கி, தோட்டா, பீரோ மற்றும் காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எல்லாம் ஸ்டேஷன் பதிவேடுகள் என்ற பெயரில் நோட்டு புத்தகத்தில் எழுதி வைக்கப்படும். இந்த நோட்டு புத்தகத்தில் உள்ள பதிவேடுகள் சரியாக உள்ளதா? என அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆய்வு செய்வார். மேலும் டிஎஸ்பி, எஸ்பி ஆகியோர் காவல் நிலையங்களை ஆய்வு செய்யும்போது, ஸ்ேடஷன் பதிவேடுகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்கின்றனர். அப்போது, அந்த ஸ்டேஷன் பதிவேடு புத்தகத்தில் உள்ள பொருட்கள் சரியான எண்ணிக்கையில் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதோடு மட்டுமின்றி இன்ஸ்பெக்டர் பணியிட மாறுதலாகி செல்லும் போது, புதிதாக பொறுப்பேற்கும் இன்ஸ்பெக்டரிடம் ஸ்ேடஷன் பதிவேடு விவரங்களை ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் காகிதங்களின் பயன்பாடு அதிகளவு உள்ளது. இதற்காகவே ஒரு குறிப்பிட்ட தொகை செலவிட வேண்டியது உள்ளது. இந்த செலவைக் குறைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்களை அனுப்பும் இ-கவர்னன்ஸ் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2020-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை அரசின் பல்வேறு துறைகள் செயல்படுத்தி வருகின்றன. இதற்கிடையில், ஸ்ேடஷன் பதிவேடுகள், புதிய நவீன சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சமபந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி, ஏடிஎஸ்பி, எஸ்பி ஆகியோர் அந்த காவல் நிலையங்களில் உள்ள ஸ்ேடஷன் பதிவேடு விவரங்களை சாப்ட்வேரில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், ஸ்ேடஷன் ப்ராப்பர்ட்டி நோட்டு புத்தகத்தில் உள்ளவற்றை புதிய நவீன சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாப்ட்வேரில் அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு தனியாக யூசர் ஐடி வழங்கப்படும். இந்த யூசர் ஐடி மூலம் அந்த காவல் நிலையத்தில் உள்ள ஸ்டேஷன் பப்பராட்டி தெரிந்து கொள்ள முடியும். டிஎஸ்பிகளுக்கு வழங்கப்படும் யூசர்ஐடி மூலம் அவர்களின் சப் டிவிசனில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள ஸ்டேஷன் பதிவேடு விவரங்களை ஆய்வு செய்ய முடியும். அதேபோல், ஏடிஎஸ்பி, எஸ்பி ஆகியோருக்கு தனியாக யூசர் ஐடி வழங்கப்படும். அவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் ஸ்ேடஷன் பதிவேடு விவரங்களை பார்க்க முடியும். இந்த புதிய சாப்ட்வேர் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post போலீஸ் ஸ்டேஷன் பதிவேடுகள் நவீன சாப்ட்வேரில் பதிவேற்றும் பணி தொடக்கம் போலீஸ் அதிகாரிகள் தகவல் காகித பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி appeared first on Dinakaran.

Related Stories: