பெற்றோருக்கு தெரியாமல் ரயிலில் வந்த சிறுவர்கள் மீட்பு

ஆவடி: திருவள்ளூவரில் இருந்து சென்னை மார்க்கமாக மின்சாரயில் நேற்று வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலில் 2 சிறுவர்கள், தனியாக பயணம் செய்து கொண்டிருந்தனர். சகபயணிகள் சிறுவனை அழைத்துப்பேசினர். அப்போது அவர்கள் சரியாக தகவல் தரவில்லை. இதனையடுத்து ஆவடி ரயில் நிலையத்தில் 2 சிறுவர்களை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ரயில்வே போலீசார் சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் திருவள்ளூர் தேரடி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரது மகன்கள் முத்துக்குமார் (6), கவிக்குமார் (5) என்று தெரியவந்தது. இவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு வெளியில் வந்துள்ளனர். இதுகுறித்து சமூக வளைதலங்களில் செய்திகள் பரவின. இதனையடுத்து போலீசார் 2 சிறுவர்களை வில்லிவாக்கத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் தகவலறிந்த பெற்றோர் விரைந்து வந்து 2 சிறுவர்களையும் மீட்டுச்சென்றனர். …

The post பெற்றோருக்கு தெரியாமல் ரயிலில் வந்த சிறுவர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: