நாமக்கல் ஏடிஎஸ்பி பணி ஓய்வு

நாமக்கல், மார்ச் 1:நாமக்கல் மாவட்ட காவல்துறை கூடுதல் எஸ்பியாக கடந்த 8 மாதமாக பணியாற்றி வந்தவர் ராஜூ (60). இவர் தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1987ம் ஆண்டு எஸ்ஐயாக பணியில் சேர்ந்தார். நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். இவர் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையொட்டி, அவருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் தலைமை வகித்து பேசியதாவது: காவல்துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி, எந்தவித புகாரும் இன்றி, பணியில் இருந்து ஒய்வு பெறுகிறார். எஸ்ஐயாக பணியில் சேர்ந்து ஏடிஎஸ்பியாக ஓய்வு பெறும் அவர், தற்போது காவல்துறையில் எஸ்ஐயாக பணிக்கு சேர்ந்துள்ள அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவரது ஆலோசனைகள் காவல்துறைக்கு என்றும் தேவை. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு எஸ்பி பேசினார். இந்த நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பி கனகேஸ்வரி, டிஎஸ்பிக்கள் இளங்கோவன், வில்சன், முருகேசன், விஜயகுமார், இயமவர்மன், சங்கீதா ஆகியோர் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி ராஜூயை வாழ்த்தி பேசினர். அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஏடிஎஸ்பி ராஜூ ஏற்புரையாற்றினார். அவருக்கு எஸ்பி ராஜேஸ்கண்ணன் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி, எஸ்ஐ சத்தியமூர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post நாமக்கல் ஏடிஎஸ்பி பணி ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: