தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!: கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்..!!

கோவை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பரவல் கட்டுக்குள் வந்ததாக கருதப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கோவை, கேரளா எல்லையில் முக்கியமான 13 சோதனைசாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று கொடைக்கானல் வரும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், கேரளாவில் இருந்து வரும் பயணிகளை பரிசோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும், வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கண்காணிப்பு மருத்துவக்குழுவையும், இ-பாஸ் முறையை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்….

The post தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!: கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: