கூடங்குளம் அணுக்கழிவு மைய திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டர் பதிவு: கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைப்பதற்கான பாதாள கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய அரசு கோரியிருக்கிறது. இது தென் தமிழகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தி விடும்.  அணுக்கழிவு கதிர்வீச்சு ஏற்பட்டால் ஒட்டுமொத்த தென் தமிழகமும் பாதிக்கப்படும். அணுக்கழிவை கோலார் தங்கவயலில் சேமிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் கூடங்குளத்திலேயே சேமிக்க மத்திய அரசு முயல்கிறது. இது தமிழக மக்களின் பாதுகாப்பை இரண்டாம் பட்சமாக கருதும் செயல். அணுக்கழிவு மையத் திட்டத்தை கைவிடுவதுடன், டெண்டரையும் திரும்பப்பெற வேண்டும்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

The post கூடங்குளம் அணுக்கழிவு மைய திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: