குமரியில் இருந்து டெல்லிக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் 15 பேர் சைக்கிள் பயணம்: 2,850 கி.மீ. தூரம் செல்கிறார்கள்

கன்னியாகுமரி: நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவையொட்டி, மத்திய பாதுகாப்பு படை சார்பில் கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்காட் வரை சைக்கிள் பயணம் நடத்தப்படுகிறது. இந்த சைக்கிள் பயணம், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இருந்து நேற்று காலை தொடங்கியது. சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் (திருவனந்தபுரம்) மேற்பார்வையில் உதவி கமாண்டர் பிரதீப் தலைமையில் 15 சைக்கிளில் வீரர்கள் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர். இப்பயணம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மாநிலங்கள் வழியாக அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று டெல்லி ராஜ்காட்டை சென்றடைகிறது. சுமார் 2,850 கிலோ மீட்டர்  பயணம், ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ் என்ற தலைப்பில் நடக்கிறது. இதை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் அரவிந்த், எஸ்.பி. பத்ரி நாராயணன் பங்கேற்றனர். கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார், பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்….

The post குமரியில் இருந்து டெல்லிக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் 15 பேர் சைக்கிள் பயணம்: 2,850 கி.மீ. தூரம் செல்கிறார்கள் appeared first on Dinakaran.

Related Stories: