ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் கோவையில் ஆய்வு: மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல்

சென்னை: ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் கோவையில் ஆய்வு மேற்கொண்டனர் என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி சென்னையில் ஏற்கனவே நிதியுதவி செய்து வரும் மெட்ரோ ரயில் 2ம் கட்டம் திட்டத்திற்கான காலமுறை ஆய்வு பணிக்காக சென்னை வந்துள்ளது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதில் விருப்பம் தெரிவித்ததுடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவுடன் இணைந்து மதுரையில் முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டது.

இதை தொடர்ந்து நேற்று கோயம்புத்தூரிலும் ஆய்வு செய்தனர். நிதியுதவி செய்வதில் பிற பன்னாட்டு வங்கிகளும் இதேபோன்ற ஆர்வத்தை காட்டி வருகின்றன. இருப்பினும், ஒன்றிய அரசின் நிதி அமைச்சகம் நிதி நிறுவனத்தை சரியான நேரத்தில் முடிவு செய்யும். சர்வதேச நிதியுதவி கோரி, தமிழ்நாடு அரசு ஏற்கனவே இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒன்றிய அரசுக்கு திட்ட பரிந்துரைகளை அனுப்பியுள்ளது என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயர் முதலீட்டு அலுவலர் வென்யு-கு, தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் கோவையில் ஆய்வு: மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: