காஞ்சு கிடக்குது மேற்கு தொடர்ச்சி மலை கணியூரில் கதிர்வீச்சு அபாயம் புகார் தொழிற்சாலைக்கு அனுமதி மறுப்பு

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூர் ஊராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று இரும்பு பொருட்களை எக்ஸ்ரே ஆய்வு செய்யும் நிறுவனத்தை துவங்க உள்ளனர். இந்த நிறுவனத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் இரும்பு உலோக பொருட்களை நவீன தொழில் நுட்பத்தில் எக்ஸ்ரே மூலம் ஆய்வு செய்து குறைபாடுகள் உள்ளதா? என்ற தொழில் நுட்பத்தில் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டு அணு மின் நிலையத்தில் இருந்து நிறுவனம் செயல்படுவதற்கான அனுமதியை பெற்றதாக உரிமையாளர்கள் கூறப்படும் நிலையில் அருகில் இருப்பவர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் இந்த தொழிற்சாலைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கணியூர் ஊராட்சி சார்பில் கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலையை இயக்க எதிர்ப்பு தெரிவித்து சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இரும்பு சாதனங்களை எக்ஸ்ரே செய்யும்போது அணுக்கதிர்கள் வெளியே வராத வண்ணம் மூன்றரை அடி அகலம் உள்ள கருங்கல் சுவர்கள் எழுப்பி பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் இந்நிறுவனத்தின் சார்பில் கட்டிட அனுமதி பெறும் போது சாதாரண இயந்திரங்களை இயக்கும் தொழிற்சாலை என தெரிவித்து கட்டிட அனுமதி பெற்றதாகவும் ஆனால் தற்போது கதிர்வீச்சு தொடர்பான இயந்திரங்களை பயன்படுத்துவதால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் ஊராட்சியின் சார்பில் கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் 15 சதவீதம் கேன்சர் எனும் கொடிய புற்றுநோய் மரபணு மூலம் வருவதாகவும், 15 சதவீதம் நமது முன்னோர்களின் வழியில் வருவதாகவும், மீதமுள்ள 70 சதவீத பாதிப்புகள் கதிர்வீச்சு மற்றும் அபாய புகையிலை பொருட்களை உபயோகப்படுத்துதல் போன்றவற்றால் வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கும் நிலையில் இதுபோன்ற கதிர்வீச்சு தொடர்பான தொழிற்சாலைகளை நிறுவுவதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

The post காஞ்சு கிடக்குது மேற்கு தொடர்ச்சி மலை கணியூரில் கதிர்வீச்சு அபாயம் புகார் தொழிற்சாலைக்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: