கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்

 

நாமக்கல், மார்ச் 16: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ‘போஷன் பக்வாடா’ ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் கலெக்டர் உமா கலந்துகொண்டு பேசியதாவது: ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு கவனம் மற்றும் ஊட்டச்சத்தை வழங்குவதற்காக, இத்திட்டம் நிறுவப்பட்டது. ஆரோக்கியமாக குழந்தைகள் பிறப்பதற்கு உண்டான அனைத்து வசதிகளும், அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாததால் பிறக்கும் குழந்தைகள், எடை குறைவாக பிறக்கிறது. இதை தடுக்க அரசு மருத்துவமனையில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.கர்ப்பிணி பெண்கள் தனது கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு எது, சத்தான உணவு எது, என ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கான விழிப்புணர்வை அறிந்து கொள்ளவேண்டும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் வாரந்தோறும் மருத்துவ பரிசோதனைகளும், ஊட்டசத்து பெட்டகங்களும் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி அனைத்து தாய்மார்களும் எடை குறைவில்லாத ஒரு ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சசிகலா, கல்லூரி முதல்வர் கோவிந்தராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: