பொன்னமராவதி,மே 24: பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டியில் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலைக்கு அதிமுக வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டியில் உள்ள பேரரசர் சிலைக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய முன்னாள் தலைவர் அதிமுக தெற்கு மாவட்டச்செயலாளர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில், ஒன்றிய செயலாளர்கள் ஆலவயல் சரவணன், காசிகண்ணப்பன், மாவட்ட பொருளாளர் அம்பி, நிர்வாகிகள் ராசமாணிக்கம், பழனிச்சாமி, பழனியாண்டி, மாரிமுத்து, உதயகுமார். செல்வக்குமார், அழகுராஜா, ஆகாஷ், வழக்கறிஞர் சுந்தாயி, சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post கருப்புக்குடிப்பட்டியில் அதிமுக சார்பில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மரியாதை appeared first on Dinakaran.
