கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் மையம் திறப்பு

 

கந்தர்வகோட்டை, பிப்.10: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் மையம் சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப் பகுதி மக்கள் தாசில்தார் அலுவலகம் வந்து ஆதார் மையம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்று வந்தனர். இப்பகுதி மக்கள் மீண்டும் ஆதார் மையத்தை தாசில்தார் அலுவலக வளாகத்தில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் அரசு கவனத்தில் கொண்டு மீண்டும் பழைய இடத்திலேயே ஆதார் மையம் அமைக்க அனுமதி அளித்தனர். இதனால் இப்பகுதி மக்களுக்கு சிரமம் குறைந்து ஆதார் அட்டையில் பெயர் திருத்துதல், அலைபேசி எண் இணைத்தல், பிறந்த தேதி குறைபாடு நிவர்த்தி செய்தல், 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் முடிந்த ஆதார் அட்டைகளை புதுப்பித்தல் போன்ற பணி சுலபமாக நடந்து வருகிறது என பொது மக்கள் தெரிவித்தனர்.

The post கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் மையம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: