எஸ்ஐ பணிக்கு பயிற்சி வகுப்புகள்

நாமக்கல், செப்.14: நாமக்கல்மாவட்ட வேலை வாய்ப்பு,தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. போலீஸ் எஸ்ஐ பதவிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, அடுத்தகட்டமாக நடைபெறும் உடல் அளவீடு சோதனை மற்றும் உடல் திறன் சோதனை தேர்வில், வெற்றி பெற உரிய வகையில் முன்னேற்பாடாக உடற்தகுதி பயிற்சி வகுப்பு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக, கலெக்டர் அலுவலக விளையாட்டுத் திடலில் தொடங்கப்பட உள்ளது. இத்தேர்வுக்கான இலவச உடற்தகுதி பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். இத்தகவலை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post எஸ்ஐ பணிக்கு பயிற்சி வகுப்புகள் appeared first on Dinakaran.

Related Stories: