இருக்கன்குடி அருகே அடுக்குநிலை நடுகல் கண்டுபிடிப்பு

அருப்புக்கோட்டை: இருக்கன்குடி அருகே நடந்த களஆய்வில் அடுக்குநிலை நடுகல்லை வரலாற்று துறையினர் கண்டறிந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்பிகே கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் விஜயராகவன் தலைமையில் அத்துறை மாணவர்கள் ராஜபாண்டி, சரத்ராம் ஆகியோர் இருக்கன்குடி அருகேயுள்ள மாவில்பட்டியில் களஆய்வு செய்தனர். அங்கு 8 அடி உயரமும், ஒன்றரை அகலமும் உடைய ஓர் தூணில் நான்கு பக்கங்களிலும் 5 அடுக்குகளை கொண்ட சிறிய அளவிலான புடைப்பு சிற்பங்களுடன் உள்ள ஓர் அடுக்குநிலை நடுகல்லினை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ‘சங்க கால தொடக்கம் முதலே நடுகல் வழிபாடுகள் இருந்து வருகின்றன, தற்போது மேற்புற கள ஆய்வின் மூலம் கண்டறிந்த அடுக்குநிலை நடுகல்லானது கி.பி.15ம் நூற்றாண்டை சார்ந்த விஜயநகர பேரரசின் கர்நாடக பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பமானது கர்நாடக அடுக்குநிலை நடுகல் போன்ற அமைப்பில் இருப்பதனை காண இயலும். அந்நடுகல்லில் இரு மாடுகளுடன் புல்லாங்குழல் ஊதும் வீரர்கள் தங்கள் துணைவியாரோடு இருக்கும் சிற்பங்களும், வில்லேந்திய வீரர்களும், மேலும் சில வீரர்கள் தங்கள் வாளினை தரையினை நோக்கி காட்டியவாறும் மற்றும் அவ்வீரர்கள் அனைவரும் அரை ஆடையினை அணிந்தவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நடுகல்லில் மேற்பகுதியானது அலங்காரமாக செதுக்கப்பட்டுள்ளது. அதில் சூரியன், சந்திரன் காணப்படுகிறது. அதாவது சூரியனும், சந்திரனும் உள்ளவரை இவ்வீரர்களின் தியாகங்கள் போற்றப்பட வேண்டும் என்பதை தெரிவிக்கின்றது. விஜயநகர மன்னர்கள் காலத்தில் இருகுழுக்கள் அல்லது இரு ஊரார்கள் இடையே ஏற்பட்ட பூசலின்போது உயிர் இழந்த வீரர்கள் மற்றும் உடன்கட்டை ஏறிய அவ்வீரர்களுடைய மனைவிகளின் நினைவை போற்றும் வகையிலும் இந்நடுகல்லானது செதுக்கப்பட்டியிருக்கலாம். தற்போது இந்நடுகல்லினை கோப்பம்மாள் எனும் பெயரில் வழிபாடு செய்து வருகின்றனர்….

The post இருக்கன்குடி அருகே அடுக்குநிலை நடுகல் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: