ஜி-7 உச்சி மாநாடு நிறைவு; பாரிஸ் நகரில் மோடி தொழில்நிறுவன சிஇஓக்களுடன் சந்திப்பு

பாரிஸ்: ஜி7 உச்சி மாநாட்டை நிறைவு செய்த பிரதமர் மோடி நேற்று பாரிஸ் நகருக்கு சென்றார். அங்கு தொழில்நிறுவன சிஇஓக்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரான்சின் எவியன்லென் பெய்ன்ஸ் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு ஆலோசனை நடத்தினார். உச்சி மாநாட்டில் தலைவர்களை சந்தித்த பிறகு பிரதமர் மோடி பாரிஸ் சென்றடைந்தார்.

அங்கு அவருக்கு இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து பாரிஸ் நகரில் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும்(சிஇஓ) மோடி சந்தித்து பேசினார். செயின்ட் கோபைன் நிறுவன சிஇஓ பெனோய்ட் பேஸின், ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் சிஇஓ மார்டின் சியோன், மிஸ்ட்ரல் சிஇஓ ஆர்தர் மென்ஞ் ஆகியோரை சந்தித்து பேசினார். அதன் பின் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் விவாடெக் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டார்.

Related Stories: