ஈரானுடன் நாளை ஒப்பந்தம்; டிரம்ப்-நெதன்யாகுவின் நட்பு கேள்விக்குறியானது

வாஷிங்டன்: கடந்த ஆண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் பற்றி கூறுகையில், ‘‘வெள்ளைமாளிகையில் இஸ்ரேலுக்கு கிடைத்த மிகச்சிறந்த நண்பர்’’ என பாராட்டினார். ஆனால் ஈரானுடனான போருக்குப் பிறகு அதிபர் டிரம்ப்-நெதன்யாகு இடையேயான நட்பு விரிசல் அடைந்துள்ளது. லெபனான் மீதான தாக்குதல் தொடர்பாக நெதன்யாகுவின் முடிவை விமர்சித்த அதிபர் டிரம்ப், அவரை பைத்தியக்காரர் என வெளிப்படையாக திட்டினார்.

ஈரானுடன் நாளை ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில், லெபனான் விஷயத்தில் நெதன்யாகு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். அதோடு, ‘நான் இல்லாவிட்டால் இஸ்ரேல் இருக்காது’ என்றும் டிரம்ப் கூறி உள்ளார். எனவே, ஈரான் போரில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதை நெதன்யாகு தடுக்க முயன்றால் டிரம்ப் தனது செல்வாக்கை பயன்படுத்த தயங்க மாட்டார் என அமெரிக்க அரசுக்கு ஆலோசகராக இருந்த அரோன் டேவிட் மில்லர் கூறி உள்ளார். காசா போரிலேயே இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அரசியலில் பெரும் எதிர்ப்பை பெற்றது. தற்போது ஈரான் விவகாரம் டிரம்ப்-நெதன்யாகுவின் நட்பை சோதிக்கும் களமாக அமைந்துள்ளது.

Related Stories: