லண்டன்: உக்ரைனுக்கு எதிராக போர் நடத்தி வரும் ரஷ்யா மீது பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இந்த நிலையில், கடந்த வாரம் இங்கிலிஷ் கால்வாய் வழியாக கச்சா எண்ணெய் ஏற்றி எம்பி ஸ்மிர்டோஸ் என்ற எண்ணெய் கப்பலை பிரிட்டன் கடற்படை கைப்பற்றியது. சந்தேகத்துக்குரிய ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றிய பிரிட்டிஷ் கடற்படையினர் கப்பலின் கேப்டன் அஜய் பந்த்(38) என்பவரை கைது செய்துள்ளனர். கப்பலில் உள்ள 24 ஊழியர்களில் இந்தியர்கள் மற்றும் ஜார்ஜியாவை சேர்ந்தவர்கள் .
