அமெரிக்காவால் சுட்டு கொல்லப்பட்ட 2 இந்திய மாலுமிகளின் உடல்கள் தாயகம் கொண்டு வரப்பட்டன

துபாய்: அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட 2 இந்திய மாலுமிகளின் உடல்கள் நேற்று இந்தியா கொண்டு வரப்பட்டன. ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போரின் ஒருபகுதியாக கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி ஓமன் வளைகுடா பகுதியில் பலாவு கொடியுடன் எம்.டி.செட்டபெல்லோ என்ற வணிக கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குல் நடத்தியது.

இந்த தாக்குதலில் பட்னலா சுரேஷ், ஆதித்ய சர்மா மற்றும் சிவானந்த் சவுராசிய ஆகிய இந்திய மாலுமிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். உயிர் தப்பிய 21 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று முன்தினம் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் உயிரிழந்த மாலுமிகள் ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுராசியா ஆகியோரது உடல்கள் நேற்று இந்தியா கொண்டு வரப்பட்டன. இந்த தகவலை மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் தன் எக்ஸ் பதிவில் அதிகாரப்பூர்வமாக வௌியிட்டது.

Related Stories: