மீறினால் குண்டு போடுவோம்; ஈரானுடனான ஒப்பந்தம் இறுதியானது கிடையாது: அதிபர் டிரம்ப் மிரட்டல்

எவியன்: அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் நாளை கையெழுத்தாக உள்ளது. இதுவரை இந்த ஒப்பந்தத்தில் என்ன மாதிரியான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரான்சில் ஜி7 உச்சி மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்சிசியுடன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இன்னும் ஒன்றிரண்டு நாளில் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்படும். அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் முழு விவரம் யாருக்கும் தெரியாது. ஆனால் அது மிகவும் வலுவானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகச் சந்தை மிகவும் மகிழ்ச்சி அடையும். அதே சமயம் இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே தவிர இறுதியானது அல்ல. இதில் உள்ள அம்சங்களை ஈரான் மீறினால் அதன் மீது குண்டு போடுவோம். அதன் நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கவில்லை என்றால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்’’ என கூறி உள்ளார்.

Related Stories: