உத்தரகாண்டில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது

 

ரிஷிகேஷ்: ரிஷிகேஷில் உஜ்ஜைனி எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உத்தரகண்ட் மாநிலம் யோக் நகரி ரிஷிகேஷ் ரயில் நிலையம் அருகே உள்ள கண்ட் காவ்ன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணி அளவில் உஜ்ஜைனி எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் திடீரென தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டன.

ரயில் நிலைய நடைமேடையில் இருந்து யார்டுக்கு ரயில் மாற்றப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பயணிகள் யாரும் ரயில் பெட்டிகளில் இல்லை. ரயில் இன்ஜின் ஷண்டிங் பாதையின் இறுதியில் அமைந்துள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டது. இதன் விளைவாக பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: