சாராயம் காய்ச்சிய அதிமுக நிர்வாகி கைது

ஆறுமுகநேரி: தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலம், குமாரப்பண்ணையூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (50). இவர், அதிமுக கிளை நிர்வாகியாக உள்ளார். இவர் வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஆத்தூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று முத்துக்குமார் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 5 லிட்டர் கேனில் இருந்த 2.5 லிட்டர் சாராயம் மற்றும் பானை உள்ளிட்ட ஊறல் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து முத்துக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாராயம் என தெரியாமல் இருக்க 5 லிட்டர் கேனில் 2.5 லிட்டர் சாராயத்தையும், மற்றொரு 5 லிட்டர் கேனில் 2.5 லிட்டர் தண்ணீரும் வைத்து போலீசாரை திசை திருப்ப முத்துக்குமார் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: