புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க தடை நீக்கம் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை: பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

 

சென்னை: புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தடை நீக்கத்தால் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவும், ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்தவும் தடையாக இருந்த விதியை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது.

புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கான தடை நீக்கப்பட்டு விட்ட நிலையில், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி தனது அறிக்கையில் ெதரிவித்துள்ளார்.

 

Related Stories: