சென்னை வந்தார் எடப்பாடி பழனிசாமி

சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டிருந்தார். அவரை அதிமுக மாஜி அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி நேற்று பகல், விமானம் மூலம் சென்னை புறப்பட்டு வந்து சேர்ந்தார். அவரை கட்சியின் நிர்வாகிகள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். சேலம் மாவட்டத்தில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களும் அவரை வழியனுப்பி வைத்தனர்.

Related Stories: