டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் விழித்திரை மருத்துவம் குறித்தான மாநாடு: 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

 

சென்னை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் விழித்திரை மருத்துவம் குறித்தான மாநாடு நடைபெற்றது. டாக்டர் அகர்வால்ஸ் ரெட்டினா பவுண்டேஷன், விழித்திரை மருத்துவம் குறித்து ஆண்டுதோறும் நடத்தி வரும் அறிவியல் மாநாடான ரெட்டிகான் (RETICON) 2026, 16வது ஆண்டாக நேற்று சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து விழித்திரை நிபுணர்கள், பொது கண் மருத்துவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவக்கல்வி மாணவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழித்திரை (ரெட்டினா) பாதிப்புகளைக் கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன உத்திகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால், தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வின் அகர்வால் மற்றும் விழித்திரை சேவைகள் பிரிவின் இயக்குநர் டாக்டர் மனோஜ் கத்ரி ஆகியோர் முன்னிலையில், ரெட்டிகான் 2026 மாநாட்டை மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் சி. தர் தொடங்கி வைத்தார்.அதன்பின் மருத்துவர்கள் அமர் அகர்வால் மற்றும் சௌந்தரி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: 16 வருடமாக கண் பாதிப்பை சரி செய்யும் வகையில் கருத்தரங்கு நடைபெற்று வருவதாகவும், இதன்மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் கருத்தரங்களில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

வெயில் காலத்தில் கண்களை தொடாமலும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், வெயிலை தாங்கமுடியாமல் 24 மணி நேரமும் ஏசி அறையில் இருப்பதால், கண்கள் வறண்டு விடும், இதனை தடுக்க 20:20:20 என்கிற முறையை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக 20 நிமிட இடைவெளியில், 20 அடி தூரத்தில் உள்ள பொருளை, 20 விநாடிகள் பார்ப்பதால் கண்கள் புத்துணர்ச்சி அடைவதாக வேண்டும். மேலும் ஏசி, பேன் ஆகியவை நேரிடையாக முகத்தில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனை தவிர முறையான உணவை எடுத்து கொள்ள வேண்டும். தண்ணீர் நன்றாக குடித்து நீர் சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Related Stories: