கும்பகோணம் கோட்டம் சார்பில் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு ஓஆர்எஸ் கரைசல்

கும்பகோணம், மே.1: கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில், கடும் வெயிலை எதிர்கொள்ளும் விதமாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு உப்பு சர்க்கரை கரைசல் பவுடர் (ORS) பாக்கெட்டுகளை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் தசரதன் வழங்கினார். அப்போது, பொது மேலாளர்கள் சிங்காரவேலு (கூட்டாண்மை அலுவலகம்), நடராஜன் (கும்பகோணம் மண்டலம்) மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

Related Stories: