பேரையூர், மே 1: சேடபட்டி அருகே வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேடபட்டி அருகேயுள்ள அல்லிகுண்டம் பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி முத்துலட்சுமி (44). இவர் சேடபட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முத்துலட்சமி சேடபட்டி பள்ளிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் இருக்கும் பீரோவின் கதவுகளையும் உடைத்து, அதில் அவர் வைத்திருந்த ரூ.24 ஆயிரம் ரொக்கம், 2 கிராம் தங்கத்தோடு, ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து பணம், நகை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
