கூடலூரில் திடீர் கோடை மழை

கூடலூர், மே 1: கூடலூர் நகர சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீர் கோடை மழை பெய்தது. கூடலூர் சுற்றுவட்ட பகுதிகளிலும் சமவெளிக்கு பகுதிகளுக்கு இணையாக பகல் நேரத்தில் கடும் வெப்பநிலை நிலவியது.  வனப்பகுதிகளில் வறட்சி காரணமாக செடி, கொடிகள் கருகி ஆங்காங்கே காட்டுத்தீயும் ஏற்பட்டது. முதுமலை வனப்பகுதிகளில் அடுத்தடுத்து காட்டு யானைகளும் வறட்சி காரணமாக இறந்தன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு மேலாக மாலை நேரத்தில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

ஒரு சில பகுதிகளில் லேசான கோடை மழை பெய்தது. எனினும் மேகமூட்டம் மட்டுமே அதிகமாக காணப்பட்டது. மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு மேல் அரை மணி நேரமாக திடீர் கோடை மழை பெய்தது. மேல் கூடலூர், கூடலூர் நகரம், இரண்டாவது மைல், செம்பாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. பலத்த மழையால் நகரில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

 

 

Related Stories: