சூரியகாந்தி விதை ரூ.18 லட்சத்துக்கு ஏலம்

வெள்ளகோவில்,மே1: வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சூரியகாந்தி விதை ஏலம் நடந்தது. இதில் புதுப்பட்டி கோட்டைப்பட்டி. பாறையூர், திருச்சி பகுதிகளை சேர்ந்த 25 விவசாயிகள் 26,135 கிலோ சூரியகாந்தி விதையை கொண்டு வந்திருந்தனர். வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்க வந்திருந்தனர்.

அதிகபட்சமாக ஒருகிலோ சூரியகாந்தி விதை ரூ.73.39க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.09க்கும், ஏலம் போனது. மொத்தம் ரூ.18 லட்சத்துக்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட முதுநிலைச் செயலாளர் தெரிவித்தார்.

 

 

Related Stories: