விருதுநகர், மே 1: விருதுநகர் அருகே முன் விரோதத்தில் இளைஞரை பீர் பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் முதலிப்பட்டி அருகே உள்ள தியாகராஜபுரத்தை சேர்ந்தவர் செல்லையா மகன் மாணிக்கராஜா (20). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதில் ஏற்கனவே ஏற்பட்ட தகராறில் மாணிக்கராஜாவின் சகோதரர் மதுபாலாவை தாக்கிய வழக்கில் ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.
தற்போது ரமேஷ் பிணையில் ஜெயிலில் இருந்து வெளிவந்துள்ளார். இந்த நிலையில், கொடிமரம் அருகே நின்று கொண்டிருந்த மாணிக்க ராஜாவை, ரமேஷின் அக்காள் மகனான முத்துக்குமார் (22) பீர் பாட்டிலால் குத்தியுள்ளார். இதையடுத்து அவர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக மாணிக்கராஜா அளித்த புகாரின் பேரில் முத்துக்குமாரை வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
