இளம்பெண் மாயம்: தாய் புகார்

ஈரோடு, ஏப். 30: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி குஞ்சாமாபாறை ராஜ்குமார் மகள் மோகனபிரியா (19). இவர், பிளஸ் 2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 28ம் தேதி பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

மகள் வீடு திரும்பாததால் அவரது அம்மா நிர்மலா, பாட்டி வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மோகனப்பிரியா அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அக்கம், பக்கம், உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசில் நிர்மலா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Related Stories: