தேனியில் மழை

தேனி, மே 1: தேனியில் கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயில் நிலவி வந்தது. அதிகாலை முதலே வெயிலின் புழுக்கம் துவங்கி, பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது இதன் காரணமாக பகலில் தெருக்களில் நடமாடும் பொது மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. நேரங்களிலும் வெயிலின் புழுக்கம் காரணமாக தூக்கம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் நடமாட வேண்டாம் என கூறினாலும் காலை 10 மணிக்கே வெயிலின் கொடுமை அதிகரித்ததால் தேனிப் பகுதியில் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை தேனி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மேகம் கருத்து வானம் இருண்டது.

இதனைத் தொடர்ந்து இடி மற்றும் மின்னலுடன் சூறாவளி காற்று இணைந்து கனமழை பெய்ய தொடங்கியது. கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அனல் கக்கும் வெயிலால் அவதிப்பட்டு வந்த தேனி பகுதி மக்கள் நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர் நிலவியது. இதனால், மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

Related Stories: