போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்

ராஜபாளையம், மே 1: ராஜபாளையத்தில் போலீசாரை கண்டதும் மணல் திருடர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்று பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் அய்யனார் கோவில் ரோட்டில் ரோந்து சென்றனர்.

அப்போது எஸ்.வளைவு அருகே சென்றபோது மேற்கிலிருந்து கிழக்காக டிராக்டர் வந்துள்ளது. காவல் துறையினரை கண்டதும் நடுவழியில் டிராக்டரை நிறுத்திவிட்டு அதில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். டிராக்டரை சோதனை ெசய்ததில் சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மணல் அய்யனார் கோவில் ஆற்றில் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் டிராக்டரை கைப்பற்றி தப்பி ஓடியவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

 

 

Related Stories: