உடுமலையில் ஹாக்கி போட்டி

உடுமலை, மே 1: ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் ஜூனியர் ஆண்கள் பங்கு பெற்ற மாவட்டங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டி உடுமலையில் நடந்தது. இதில், 18 மாவட்ட ஹாக்கி அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய அணிகள் கோவையில் விரைவில் நடைபெறும் நாக்அவுட் போட்டியில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Stories: