தூக்கில் தொங்கிய நிதி நிறுவன ஊழியர்

சிவகாசி, மே 1: சிவகாசி ரிசர்வ்லைன் வசந்தம்நகரை சேர்ந்தவர் முருகன் மகன் முத்துகணேஷ்(30). இவர் சிவகாசியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துகணேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வாலிபர் முத்துகணேஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Related Stories: