கிணத்துக்கடவில் பலத்த காற்று, மழை மரம் உடைந்து மின் கம்பத்தின் மீது விழுந்தது

கிணத்துக்கடவு, மே 1: கிணத்துக்கடவில் நேற்று மாலை பலத்த காற்று வீசியதால்,புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு மரம் உடைந்து,அங்குள்ள மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின் வயர்கள் துண்டிப்பு ஏற்பட்டது, இதனால் பெரியார் நகர் அண்ணா நகர் மற்றும் மேம்பாலத்தின் கீழே உள்ள மின்விளக்கு செல்லும் மின்சாரம் தடைபட்டது.

தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு மரத்தை கம்பத்தின் மீது விழுந்த மரத்தை அகற்றி மின் இணைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மின் வயர் துண்டிப்பின் காரணமாக, பெரியார் நகர் அண்ணா நகர் பகுதிகளுக்கு சுமார் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால்,அந்த பகுதி இருளில் மூழ்கியது.

Related Stories: