திருத்துறைப்பூண்டி,ஏப்.30: திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் செல்லம்மா காளியம்மன் சித்திரை திருவிழா நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தில் உள்ள பிடாரி என்கிற செல்லம்மா காளியம்மன் ஆலய சித்திரை திருவிழா கடந்த 26ம் தேதி காப்பு காட்டுதல்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும்அம்பாள் வீதியுலா காட்சி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொழுதூர் பழைங்குடி சென்று நல்ல மாரியம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து வேளூருக்கு அழைத்து இரவு அன்ன வாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது.
வரும் 3ம் தேதி வழக்கம் போல் காலை 9 மணி முதல் காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல், கஞ்சி வார்த்தல் நடைபெறும் 4ம் தேதி பழையங்குடி பிடாரி குளம் மேல் கரையில் இருந்து வழக்கம் போல் காவடிகள் புறப்படும் திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர், தக்கார் சிங்காரவடிவேலு மற்றும் வேளூர் கிராமவாசிகள் செய்துள்ளனர்.
