நீடாமங்கலம் அருகே வெண்ணி பைபாஸ் சாலையில் பேரிகார்டு அமைக்க வேண்டும்

நீடாமங்கலம், ஏப்.30: நீடாமங்கலம்அருகே கோவில் வெண்ணி பைபாஸ் பிரிவு சாலையில் பேரிகார்டு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் கோவில்வெண்ணி பைபாஸ் நீடாமங்கலம் பிரிவு சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி அருகில் காவல்துறை சுங்கசாவடியில் பாதுகாப்பு இரும்பு பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகில் பைபாஸ் சாலை நீடாமங்கலம் பிரிவு சாலை உள்ளது.

இந்த இடம் வளைவான பகுதியாக உள்ளது. மேலும் நாகை சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அதிவேகத்துடன் வருவதால் இந்த பிரிவு சாலை சந்திப்பில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த சந்திப்பு சாலையில் இரும்பு பேரிகார்டு அமைக்கப்பட்டால் வாகன விபத்துகள் தவிர்க்கப்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். எனவே இந்த பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இரும்பிலான பேரிகார்டுகள் அமைத்திட நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் அதன் தலைவர் பத்மஸ்ரீராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Related Stories: