தஞ்சாவூர், ஏப்.29: தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: குடியரசு தினத்தன்று வழங்கப்படும் பன்முக திறமைக்கான ‘பத்ம விருது’ 2027 பெறுவதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் (ஆண்/ பெண்) விண்ணப்பிக்கலாம். 2026ம் ஆண்டில் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொது விவகாரங்கள், சிவில் சேவைகள், வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவர்களுக்கு, 26.1.2027ம் நாளன்று கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் மாநில அளவில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
மேற்படி விருதிற்கு பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துரு 10.6.2026க்குள் இணையதளம் (< https://awards.gov.in/ >) மூலம் வரவேற்கப்படுகிறது. 10.6.2026க்குள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்த விவரத்தினை அறை எண்.303, 3-வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விவரம் தெரிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
