கடவூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கடவூர் : கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய பகுதிகளில் கனிசமாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடவூர் வட்டார பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடைக்கு தயாராகி வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கு சாகுபடியை பொருத்தவரை சரியான நல்ல ரகங்கள் மற்றும் நிலம் தயாரிப்பு முறைகள் மிகவும் அவசியம்.

மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் கோ 2, முள்ளுவாடி, தாய்லாந்து, பர;மா, குங்குமரோஸ், எச் 226, ஏத்தாப்பூர் 1 ஆகிய ரகங்கள் உள்ளன.

இந்த சாகுபடியில் பாசனவசதி இருந்தால் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் நடவு செய்யலாம். இதேபோல் மானாவாரியில் சாகுபடியை தொடங்கும்போது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சாகுபடிக்கு ஏற்றபருவமாகும்.

மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் செம்மண், கரிசல் மண் ஆகிய மண் உள்ள நிலம் சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும். மண்ணில் தழைச்சத்து அதிகமாக இருக்க வேண்டும். களிமண் மற்றும் வண்டல் மண்ணில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியை செய்யக்கூடாது.

விதை அளவு மற்றும் பயிரிடும் முறையில் விதை நேர்த்தி மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 1900 முதல் 2000 கிலோ கிழங்குள் தேவைப்படுகிறது. இதில் ஒவ்வொரு கரணையும் அரை அடி நீளத்துடன் 8 முதல் 10 கணுக்களுடன் இருப்பது நல்லது. விதைக்கரணைகளை பூசண மருந்துக் கரைசலில் ஊற வைத்து நடவு செய்வதால் நோய் தாக்குதலை தடுக்கலாம்.

நடவு செய்யும் முறை மற்றும் நீர் நிர்வாகம்: மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் பாசன சாகுபடிக்கு இரண்டரை அடி இடைவெளியில் பார;பிடித்து அதே அளவு இடைவெளியில் பாரில் வரிசையாக நடவு செய்ய வேண்டும். வளமான நிலங்களுக்கு 3 அடிக்கு 3 அடி இடைவெளி போதுமானது.

மானாவாரியில் 2 அடிக்கு 2 அடி இடைவெளி பார்கள் அமைத்து நடவு செய்யலாம். நடவு செய்தவுடன் முதல் பாசனமும் அதன் பிறகு 3 வது நாள் உயிர் தண்ணீர் இடவேண்டும். மரவள்ளிக்கிங்கு உரம் இடும் முறை பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் 40 கிலோ மணலுடன் கலந்து நடவு செய்ய 30 வது நாளில் இட வேண்டும்.

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி முறையில் இலைகள் நிறம் மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் கலந்து பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும் போது நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும். இவ்வாறு இருக்கும் போது சாகுபடி செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கை அறுவடைகளை தொடங்கலாம்.

சாகுபடியை தொடங்கிய நாளில் இருந்து 240 நாட்களில் அறுவடை செய்யும் போது ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 டன் வரை மரவள்ளிக்கிழங்கு கிடைக்கிறது. ஆகவே மேற்படி ஆலோசனைகளை கடைபிடித்து மரவள்ளக்கிங்கு சாகுபடி செய்தால் நல்ல மகசூல் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: