தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்: குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

சென்னை: தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ‘குடிநீர் கேன்களில் நிறுவனத்தின் பெயர், காலாவதி தேதி குறிப்பிட வேண்டும். குடிநீர் கேன்களை 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக்கூடாது. பலமுறை பயன்படுத்திய பழைய கேன்களில் தண்ணீரை விற்பனை செய்யக்கூடாது. குடிநீர் கேன்களை நேரடியாக வெயிலில் படும்படி வைக்க கூடாது. விதிகளை மீறும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’ எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேன் குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: