அரசினர் தொழில்நுட்ப கல்லூரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

வலங்கைமான்,ஏப்.25: வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில்\” முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. வலங்கைமான் அரசினர் பலகை தொழில் நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு கூட்டம் நேற்று கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவினை முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயசங்கர் ஒருங்கிணைத்தார்.

கல்லூரியின் முதல்வர் ஜான்லூயிஸ் தலைமை வகித்தார். விழாவில் அனைத்து துறைத் தலைவர்கள், வகுப்பு ஆசிரியர்கள், சப்போர்ட்டிங் பணியாளர்கள், அனைத்து துறை முன்னாள் மாணவர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்வில் மாணவர்களின் வேலை வாய்ப்பு மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் வழிகாட்டுதல்கள், நோக்கங்கள், செயல்பாடுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. நிறைவில் மின்னணு மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியர் சுரேந்திரன் நன்றி கூறினார்.

 

Related Stories: