நீடாமங்கலம்,ஏப்.25: நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் நடவு பணிக்கு நாற்று தயாராகி வருகிறது. இதில் விவசாயிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் கோடை சாகுபடி தொடங்கி நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளான சித்தமல்லி, கடம்பூர், பரப்பனா மேடு, பூவனூர், ராயபுரம், மேலப்பூவனூர், காளாச்சேரி, கோவில் வண்ணி, ஆதனூர், ராஜப்பையன் சாவடி, அனுமந்தபுரம், ரிஷியூர், கானூர், பருத்திக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 43 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் தாளடி சாகுபடி செய்து தற்போது அறுவடை பணியை முடித்துள்ளனர்.
இந்தப்பகுதிகளில் முன்கூட்டியே தாளடி பணியை தொடங்கியவர்கள் இயந்திர அறுவடைப்பணி முடித்து இந்த பல்வேறு கிராமங்களில் சுமார் 20,000 ஏக்கரில் முன் பட்டம், பின் பட்டம் என கோடை சாகுபடி பணியை தொடங்கி நாற்றங்கால் சரி செய்து, விதையிடம் பணியில் ஈடுபட்டு விதைகள் வளர்ந்து நடவு பணிக்கு தயாராக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
