மே 10ம் தேதி உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

பேராவூரணி, ஏப்.25: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணம் கிளையில் கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜுமுஆ பள்ளிவாசலில் மாவட்ட துணைச் செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் மே மாதத்தில் பத்து நாட்களுக்கு சிறுவர் சிறுமியர்களுக்கான கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடத்துவது, மே 10 அன்று 10 மற்றும் 12வது மாணவ, மாணவிகளுக்கு அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது குறித்து உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்துவது,

பெண்களுக்கான சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் அப்துல்லா, யூசுப் மற்றும் கரீம் ,மூமின், நஸீம்ஷா, ஜியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Related Stories: