பூதலூர் ஆனந்த விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா

வல்லம், ஏப்.23: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஆனந்த விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழாவை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஆனந்த காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ஆனந்த விநாயகர் கோயில்.

இக்கோயிலில் வருஷாபிஷேகத்தை ஒட்டி விநாயகருக்கு பல்வேறு திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை சிவ பாலசுப்பிரமணிய அர்ச்சகர் செய்திருந்தார்.

 

Related Stories: