திருவையாறு தாலுகா அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு

திருக்காட்டுப்பள்ளி, ஏப்.23: திருவையாறு தாலுகா அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்கு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவையாறு தொகுதியில் 27 மண்டலங்களுக்கும், 340 வாக்குச்சாவடி மையங்களுக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் திருவையாறு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முருககுமார், விவேகானந்தன், ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி அருள்மொழி அரசு ஆகியோர் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

இன்று நடைபெறுகின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்களை அந்தந்த மண்டலத்துக்குரிய அனைத்து பெட்டிகளும் வாகனத்தில் ஏற்றப்பட்டதுடன், அவர்களுக்கு தேவையான பெட்டிகள், வாக்கு பதிவிடும் பெட்டி, மை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வாகனத்தில் ஏற்றப்பட்டு போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

 

Related Stories: